September 3, 2010 · 0 Comments
கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்கு ஆற்றிய பணிக்கென இந்திய விமான படையில் குரூப் கேப்டனாக சச்சினுக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டது. இந்திய விமான படையின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் நியமிக்கப்பட்டார். இதன்படி இவருக்கு குரூப் கேப்டனாக கவுரவ பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பதவி ஏற்பையொட்டி சச்சின் அதிகாரி தோரணை உடையில் வித்தியாசமாக காணப்பட்டார்.
இந்த பொறுப்பு பெரும் மதிப்பிற்குரியது, தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் நாட்டுக்கு இன்னும் தொடர்ந்து சேவை செய்வேன் என்று பதவியேற்றதும் சச்சின் கூறினார். மேலும் கூறுகையில் இளைஞர்கள் உயர்ந்த லட்சியக்கனவு காண வேண்டும். இளைஞர்களின் பங்கு இந்த நாட்டுக்கு முக்கியத்தேவை. இளைஞர்கள் விமான படையில் சேர ஆர்வமாக முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியபோது மேட்ச் பிக்சிங் பெரும் கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
By Ottran.com
Tags: Airforce Group Captain, Airforce Joined, Sachin Tendulkar