மீண்டும் இணையும் கௌதம்-சூர்யா
September 1, 2010 ·
1 Comments
‘எமி ஜாக்சன்’ இந்தப் பெயரைக் கேட்டவுடனே அனைவரது மனமும் ‘வாம்மா…துரையம்மா!’ என்று வரவேற்கும். மதராசபட்டினம் கதாநாயகி எமி ஜாக்சனை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?
இயக்குனர் விஜய் தேடித்தந்த இங்கிலாந்து அழகி எமி. மதராசபட்டினம் படம் முடிந்தவுடன் தனது சொந்த நாட்டுக்கு பறந்துவிட்டார். “எனக்கு சென்னையையும், தமிழ் சினிமாவையும் மிகவும் பிடித்திருக்கு. எனக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைத்தால் இங்கேயே தங்கிவிடுவேன்” என்றிருந்தார் எமி.
அவரது அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.கௌதம் மேனன் அடுத்து இயக்கவுள்ள ‘துப்பறியும் ஆனந்த்’ என்னும் படத்தில், சூரியாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் எமி.
‘துப்பறியும் ஆனந்த்’அஜித் நடிப்பதாக இருந்தப் படம். ஆனால்,‘மங்காத்தா’படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறேன் அதுவரை பொறுத்திருங்கள் என்று கௌதமிடம் கூறிவிட்டார் அஜித்.
(‘காக்க காக்க’ படமும் அஜித் நடிப்பதாக இருந்தது.ஆனால் அதிலும் அஜித் நடிக்கமுடியாமல் போனது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ராஜீவ் மேனனின் உதவியாளராக இருந்தார் கௌதம் மேனன். அப்போதே அஜித்தை வைத்து படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் இதுவரை அஜித்,கௌதம் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு அமையவே இல்லை.)
இதனால், கௌதம்,“நான் ஏன் அஜித்துக்காக காத்திருக்க வேண்டும்?. அந்த அவசியம் எனக்கில்லை. அதற்கு எனது நண்பர்களான கமல், சூர்யாவிற்காக எவ்வளவுகாலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்”, என்று கோபப்பட்டார்.
பதிலுக்கு அஜித்தும், “கௌதம் இயக்குனராகி பத்து வருடமாகிவிட்டது. நானும் 50வது படத்தில் நடித்து வருகிறேன். அவர் என்னை மட்டுமே நம்பி இல்லை.நானும் அவரை மட்டுமே நம்பி இல்லை” என்று கூறினார்.
இப்படியான காரசாரமான விவகாரங்கள் இருவருக்கிமிடையே நடந்தன. இந்நிலையில்,‘துப்பறியும் ஆனந்த்’படத்தில் சூர்யா நடிக்கிறார்.இந்த வகையில் அஜித்துக்கும்,சூர்யாவிற்கும் ஒரு ராசியுண்டு. நந்தா,காக்க காக்க, கஜினி ஆகிய படங்கள் எல்லாமே அஜித் நடிப்பதாக இருந்து, பின்பு சூர்யா நடித்தவைதான். இவை அனைத்துமே சூர்யாவிற்கு சூப்பர் ஹிட் படங்கள்.
இதன்படி பார்த்தால், ‘துப்பறியும் ஆனந்த்’ படமும் மெகா ஹிட்டாகும் என்பது இப்போதே தெரியுதுங்க.
Related posts:
By Ottran.com
Tags: ‘துப்பறியும் ஆனந்த்’, Emy Jackson, Gowtham, surya
சினிமா கார்னர்"
‘எமி ஜாக்சன்’ இந்தப் பெயரைக் கேட்டவுடனே அனைவரது மனமும் ‘வாம்மா…துரையம்மா!’ என்று வரவேற்கும். மதராசபட்டினம் கதாநாயகி எமி ஜாக்சனை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?
இயக்குனர் விஜய் தேடித்தந்த இங்கிலாந்து அழகி எமி. மதராசபட்டினம் படம் முடிந்தவுடன் தனது சொந்த நாட்டுக்கு பறந்துவிட்டார். “எனக்கு சென்னையையும், தமிழ் சினிமாவையும் மிகவும் பிடித்திருக்கு. எனக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைத்தால் இங்கேயே தங்கிவிடுவேன்” என்றிருந்தார் எமி.
அவரது அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.கௌதம் [...]
Surya is really great…………