September 1, 2010 · 0 Comments
இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளிடமிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் எடுக்க பிரமோஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகளுக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்அமெரிக்கா, ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் இந்த ஏவுகணை மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.

இந்த நாடுகளில் தற்போது உபயோகத்தில் உள்ள ஏவுகணைகள் கடந்த 70 களில் வாங்கப்பட்டவை ஆகும். இவற்றின் ஆயுள்காலம் விரைவில் முடிவுக்கு வருவதால் புதிய ஏவுகணைகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடுகள் உள்ளன. மற்ற நாடுகளின் தயாரிப்புகளுடன் ஒப்பிடும் போது பிரமோஸ் ஏவுகணை விலை குறைவானது. ஆனால் செயல்திறனில் மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும் சிறப்பானது.. துல்லியமானது.. சக்தி வாய்ந்தது. இந்த நாடுகளிடமிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் எடுக்க பிரமோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
By Ottran.com
Tags: ரூ.60 ஆயிரம் கோடிக்கு, ஆர்டர், ‘பிரமோஸ், ’ பிரமாதம், Bhramos, Order