முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு

February 22, 2012   ·   0 Comments

இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் விளையாடும் முறையை கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார். இதன்படி அணியில் உள்ள கம்பிர், ஷேவாக், சச்சின் ஆகியோருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது மூத்த வீரர்களின் அதிருப்தியையும், கண்டனத்தையும் சம்பாதித்தது. காரணம், சுழற்சி என்ற பேரில் சச்சினையும் உட்கார வைத்து விட்டாரே டோணி என்பதுதான் காரணம். இத்தனைக்கும் சச்சின் இந்தத் தொடரில் இதுவரை பெரிய அளவில் விளையாடவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்தரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய டோணி, மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.

இதனால் மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக், கம்பிர் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில், டோணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக பொறுப்பு வகித்த ஷேவாக், டோணியின் சுழற்சி முறையை பின்பற்றாமல், 3 மூத்த வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார். (இந்த மூன்று பேருமே 55 ரன் சேர்ப்பதற்குள் அவுட்டாகிப் போய் விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக சச்சின் மட்டும் 29 ரன்கள் சேர்த்தார். ஷேவாக் முட்டை போட்டார், கம்பிர் 22 ரன்கள் எடுத்தார்.)

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக், டோணியை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், 

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த உலக கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் வகையில், இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக டோணி எங்களிடம் அறிவித்து இருந்தார்.

ஆனால் மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக அவர் எங்களிடம் கூறியதே இல்லை. டோணி மீடியாவில் அப்படி கூறியது ஏன் என்று தெரியவில்லை. அவர் மீடியாவில் கூறியதன் கருத்தும் எனக்கு புரியவில்லை.

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் எப்படி கேட்ச் பிடித்தேன் என்பதை பார்த்தீர்களா? இதேபோல தான் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பீல்டிங் செய்து வருகின்றேன். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர்களின் பீல்டிங்கில் 20 ரன்கள் தவறியதாக டோணி கூறுவது ஏன் என்று தெரியவில்லை.

டோணி அணியின் கேப்டன், தலைவர். எனவே இது குறித்து நான் அவரிடம் கேட்க போவதில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கேப்டனும், பயிற்சியாளரும் நினைத்தால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன். இதனால் எந்த தடையும் இல்லை.

நான் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேர்வு செய்யும் 11 அடங்கிய அணிக்கும் மதிப்பு அளிக்கின்றேன்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக எங்களுக்கு சற்று ஓய்வு தருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேப்டன் டோணியின் விருப்பதற்கு ஏற்ப அவர் பேசலாம். கடந்த 2 ஆண்டுகளாக டோணி தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். அதில் நாங்கள் திருப்தியாக உள்ளோம்.

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் உட்பட பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. எனது பேட்டிங்கில் இன்னும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதிரடியாக விளையாட முயன்று, சில எளிய முறைகளில் அவுட்டாகி விடுகின்றேன். அதற்காக அதிக பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

Related posts:

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்: 'நோ பால்' போட ரூ.10 லட்சம் கேட்ட ஸ்ரீவாஸ்தவ்?
வான்கடே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட ஷாருக்கான் வாழ்நாள் முழுவதும் மைதானத்தில் நுழைய தடை!
மேட்ச் பிக்ஸிங் - இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி... இந்திய வீரர்களும் உடந்தை?

By

Tags: , , , , ,

விளையாட்டு" இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், [...]

Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


குருபெயர்ச்சி பலன்கள்

Guruperchi

பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

Ads

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

19-asin-dance-300

வேண்டாம் அசின்! – ஷங்கருக்கு கோரிக்கை

Ottran.com

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார். இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர். அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ...

19-ilayaraaja4-300

இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்!

Ottran.com

இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய ...

19-nithyanantha-300

அதிமுக எங்களை ஆதரிக்கிறது…. போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது..: நித்யானந்தா

Ottran.com

மதுரை ஆதீன விவகாரத்தில் ஆளும் அதிமுக எங்களை ஆதரிக்கிறது.. அதனால்தான் போகும் இடம் எல்லாம் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்று நித்யானந்தா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் உள்ள ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் இருக்கும் கச்சனத்தில் மருத்துவமனை ஒன்றும் மேல்நிலைப் பள்ளி ஒன்றும் ஏற்படுத்தப்படும். இங்குள்ள ஆதீன சொத்திலிருந்து கிடைக்கும் வருவாய் முழுவதும் இப்பகுதிக்கே செலவிடப்படும். என்னை பற்றி அவதூறாக செய்தி பரப்புகிறவர்களுக்கு ...

19-jackie-chan-300

வயசாயிடுச்சு… இனி ஆக்ஷனுக்கு பை! – ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!

Ottran.com

இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை… ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான். கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான ...

19-fixing-300

மேட்ச் பிக்ஸிங் – இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி… இந்திய வீரர்களும் உடந்தை?

Ottran.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.