February 21, 2012 · 0 Comments
“ஜெயம்” தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் கோபிசந்த் முன்னணி நடிகராக உள்ளார். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு 32 வயது ஆகிறது.

கோபிசந்துக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகள் பெயர் ஹரிதா. இவர் தில்குஷ் நகரைச் சேர்ந்த பிரபல வியாபாரி ராம்பாபு என்பவரின் மகள் ஆவார். திருமண வேலைகளில் ராம்பாபு தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கான பணியிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கோபிசந்த் திடீரென ஹரிதாவை மணக்க மறுத்து விட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திருமணத்தை கோபிசந்த் ரத்து செய்தது மணப்பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி அளித்தது.
மணமகள் தந்தையிடம் உறவினர்கள் திருமணம் நின்றதற்கான காரணத்தை கேட்டு துக்கம் விசாரிப் பதுபோல விசாரித்தனர்.
இதனால் ராம்பாபு மனம் உடைந்து விஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.
திருமணத்தை கோபிசந்த் நிறுத்தியதால் விஷம் குடித்ததாக ராம்பாபு தெரிவித்தார் என உறவினர்கள் கூறினர். ராம்பாபு மரணத்தை தொடர்ந்து தில்குஷ் நகரில் வியாபாரிகள் ஒருநாள் கடை அடைப்பு செய்தனர்.
By Ottran.com
Tags: கோபிசந்த்