திவாகரன் வேட்டை தீவிரமடைகிறது…சசிகலா வீட்டில் ரெய்டு- 2 பேர் கைது

January 27, 2012   ·   0 Comments

சசிகலாவின் தம்பி திவாகரனைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவரைத் தேடி சசிகலாவின் சென்னை வீட்டில் புகுந்து போலீஸார் தீவிர வேட்டை நடத்தியுள்ளனர். அதேசமயம், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், ரிஷியூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தனது வீடு மற்றும் தனது மாமனார் மாணிக்கத்தின் குடிசை வீடு ஆகியவற்றை சசிகலாவின் தம்பியான மன்னார்குடியைச் சேர்ந்த திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ண மேனன், சிவசங்கரன், கணேசன், வைத்தியநாதன், தமிழ்ச்செல்வம், குணசேகரன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் இடித்துவிட்டு, தன்னையும், தனது குடும்பத்தாரையும் தரக்குறைவாகப் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர் தனராஜிடம் கடந்த 21-ம் தேதி கஸ்தூரி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் திவாகரனிடம் விசாரணை மேற்கொள்ள, அன்றைய தினமே மன்னார்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டையில் உள்ள அவருக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி மற்றும் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், திவாகரன் அங்கு இல்லை.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து, அவரது உதவியாளர்கள், நண்பர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்டோரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதேபோல, தஞ்சாவூரில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியின் முதல்வர் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தன்னைத் தேடுவதாகவும், எனவே, தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி திவாகரன் மனு தாக்கல் செய்தார். 24-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை வருகிற 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கஸ்தூரியின் புகாரின் பேரில், திவாகரன் மற்றும் சிலர் மீது போலீஸார் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கஸ்தூரியின் வீட்டை இடிக்கப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளர் ஒரத்தூர் சாம்பசிவம் மகன் வீரசிவசங்கரன் (40), பொக்லைன் ஓட்டுநர் மேலபூவனூரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சக்தி (23) ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, நீடாமங்கலம் குற்றவியல் நடுவர் முன் முன்னிலைப்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் செல்லபாண்டி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். வீடு இடிக்கப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள திவாகரன் உள்ளிட்டோரைக் கைது செய்ய நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், 4 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 9 ஆய்வாளர்கள் கொண்ட 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

ஐபிசி 147 (கலகம் ஏற்படுத்துதல்), 448 (அத்துமீறி பிரவேசித்தல்), 294 (பி) (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்), 120 (பி) (குற்ற சதி), பி.பி.டி (பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் திவாகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா வீட்டில் ரெய்டு

இந்த நிலையில் திவாகரனைத் தேடி அவரது உறவினர்கள் ஒருவர் வீடு விடாமல் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையி்ல திவாகரனின் அக்காள் சசிகலாவின் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள இளவரசியின் வீட்டில்தான் தற்போது சசிகலா தங்கியுள்ளார். சில நேரங்களில் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டுக்குப் போய் விடுகிறார். ஆனால் சென்னையை விட்டு அழர் வெளியேறவில்லை.

இந்த இரு வீட்டிலும் திருவாரூர் போலீசார் நேற்று மாலையில் சோதனை நடத்தினர். அங்கு திவாகரன் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லை. சோதனை நடத்தும்போது சசிகலா அங்கு இருந்துள்ளார். அவரிடமும் போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. தனக்கு திவாகரன் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Related posts:

இனி சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: விடுதலைச் சிறுத்தைகள்
வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

By

Tags: , , , ,


Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

highcourt1(14)

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Ottran.com

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். முன்னதாக, தேமுதிக ...

Power star (1)

”முந்திரிக்கா கத்திரிக்கா” பவர் ஸ்டாரின் பஞ்ச் டையலாக்!

Ottran.com

சமூக இணையதளங்களில் முக்கிய பொதுப் பிரச்சினைகளுக்கு அடுத்து மக்களால் அதிகமாக விவாதிக்கப்படுபவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். பவர்ஸ்டாரை சார்ந்து வரும் அனைத்து செய்திகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் தங்களது நேர விரயம் பாராமல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பவர் ஸ்டாரின் ஒரு வீடியோ காட்சி முக்கிய வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வீடியோ காட்சியில் ஒஸ்தி படத்தில் வரும் “கலாசலா” பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ் ஆடுகிறார். அவரை சுற்றியிருந்த ரசிகர்களோ விசிலடித்து பெரும் ஆரவாரம் செய்கின்றனர்.  திடீரென்று கூட்டத்திலிருந்த ...

22-trisha-kamal-300

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா

Ottran.com

கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா. வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், “நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் ...

22-ananya4-300

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யா

Ottran.com

முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா. சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட ‘சித்தப்பு’ ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்! அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு ...

22-vijayakanth-30

நேற்று ஒன்று, இன்று 29, நாளை நமது ஆட்சி-விஜயகாந்த் முழக்கம்

Ottran.com

எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னையில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.