January 26, 2012 · 0 Comments
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், ஓசூர் தாயப்பா தோட்டத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் ராமதாஸ். வழக்கமாக அதிரடியாக பேசும் வழக்கமுடைய அவர் இந்தக் கூட்டத்தில் அட்டாக்காக பேசி கட்சியினரை அதிர வைத்தார்.

ராமதாஸ் பேசுகையில், பாமகவை தோற்கடிக்க, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., – அ.தி.மு.க.,வினர், எழுதப்படாத மறைமுக கூட்டணி அமைக்கின்றனர். அவர்கள், பா.ம.க., தயவால் வெற்றி பெறுகின்றனர். அதனால், வரும் தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் மக்களை நம்புவோம்.
பா.ம.க.,வை விட உயர்ந்த கொள்கை, கோட்பாடு உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக் காரர்களாக்கி விட்டனர்.
தேர்தல் செலவு என்பது, ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தல் செலவுக்கு பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்றுவதே, பா.ம.க., வின் முதல் வேலை என்றார்.
என்ன ‘ஐயா’, இப்படி ‘பளிச்’சுன்னு பேசிட்டாரே என்று பாமகவினரே சற்று அதிர்ச்சி அடைந்தனராம் இந்தப் பேச்சைக் கேட்டு!.
By Ottran.com
Tags: பாமக, ராமதாஸ், pmk, ramadoss