January 24, 2012 · 0 Comments
பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமரின் நிகழ்ச்சிகள் டுவிட்டரில் உடனுக்குடன் வெளியிடப்படும். பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இருந்தால் தங்கள் நலனுக்காகத் தான் அரசு பாடுபடுகிறது என்பது மக்களு்ககு தெரியும் என்று கூறப்படுகின்றது.
வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது குறித்து தான் பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் முதன்முதலாக செய்தி வெளியிட்டது. http://twitter.com/pmoindia என்ற இணையதள முகவரியில் பிரதமர் அலுவலக பணிகளை தெரிந்து கொள்ளலாம்.
By Ottran.com
Tags: டுவிட்டர், பிரதமர் அலுவலகம், மன்மோகன் சிங், twitter