குற்றவியல் குறும்படத்தில் கார்த்தி!
January 16, 2012 ·
0 Comments
பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், ஏழை குழந்தைகளுக்கான அகரம் பவுண்டேஷன் என்ற சமூக நிறுவனத்தில் தன் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளார்.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட குற்றவியல் குறும்படம் ஒன்றில் கார்த்தி நடித்துள்ளார். நாட்டில் பெருகியுள்ள சைபர் கிரிமினல்சை பற்றிய இந்த குறும்படத்தில், குற்றவாளிகளால் பாதிக்கப்படும் மக்களை பற்றியும் அவர்களை எவ்வாறு இணங்கண்டுகொள்வது என்பது பற்றியும் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த குறும்படத்தில் கடைசி சில வினாடிகளில் தோன்றி இத்தகைய தகவல்களை கூறுகிறார் நடிகர் கார்த்தி.
Related posts:
By Ottran.com
Tags: கார்த்தி, குறும்படத்தில், குற்றவியல்