January 14, 2012 · 0 Comments
தேமுதிக சார்பில் பொங்கல் திருநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

நாதஸ்வர மங்கள இசையுடன் துவங்கியத, இந்த விழாவில் கட்சித் தலைவரும் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்பட தேமுதிக மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிரணியினர் மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு வந்தவர்களுக்கு விஜய்காந்த் தம்பதிகள் பொங்கல் பரிசுகள் வழங்கினர்.
தமிழக மக்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட விஜயகாந்த், தை பிறக்கும் இந்த நல்ல வேளையில் மக்கள் இடர் நீங்கி நலம் பெற்று வாழ வாழ்த்துவதாகக் கூறினார்.
By Ottran.com
Tags: DMDK, Vijayakanth