வார ராசி பலன்

வார ராசி பலன் [06-05-12 முதல் 12-05-12 வரை]

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே,

பின்வருவதை முன் யோசித்து செயல்படக் கூடிய மேஷ ராசிக்காரர்களே: இந்த வாரம் எதிர்பார்க்கும் விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். நெருக்கடி தந்த விவகாரங்கள் அனைத்தும் விலகும். ஆரோக்கியத்துக்காக, மருத்துவச் செலவுகள் இருக்கும். வீடு, மனை வாங்குவதோ, விற்பதை ஒத்திவைத்தல் நல்லது. குழந்தைகளால் உயர்வு இருக்கும். வருமானம் போதியதாக இருந்திடும். எதிர்ப்பு, போட்டிகள் உங்கள் கட்டுபாட்டில் இருக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும். தொழில் வகையில், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தொழிலதிபர்களுக்கு அதிகப்படியான முதலீடும், அதற்கேற்றலாபமும் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று இரவு மணி 10.50 முதல் 8ம் தேதி இரவு மணி 2 வரை சந்திராஷ்டமம். புதிய பணிகள், புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றில் மிகுந்த கவனம் இருக்கட்டும். சில காரியங்களில் தாங்களே வீண் அலைச்சல்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். கவனம். 9, 10ம் தேதிகளில் தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படும். கடன் ஒன்றை தீர்ப்பதற்காக அலைச்சல் இருக்கும். 11, 12ம் தேதிகளில் சுப காரிய விஷயமாக அலைச்சல், செலவுகள் இருக்கும். நண்பர் ஒருவரின் உதவி பயனுள்ளதாக அமையும்.
பரிகாரம்: செண்பக மலர்களால், முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபடுதல் நல்லது.

ரிஷபம் 

ரிஷப ராசி அன்பர்களே,

சோதனைகளோ, வேதனைகளோ எதனையும் நகைச்சுவையோடு எடுத்துக் கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களே: இந்த வாரம் ஓரளவுக்கு சுக சவுகர்யங்களும், வருமானமும் கிடைக்கக் கூடிய சூழ்நிலையே. செய்தொழில் துறையில் மறைமுக இடையூறுகள் நீங்கும். அரசாங்க நன்மைகளும் கூடி வரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்படலாம். உறவினர்களால் போதிய உதவியும் பக்கபலமும் ஏற்படும். உத்தியோக உயர்வு, விருப்பமான இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். ஸ்திர சொத்துக்களை சிலர் வாங்கக் கூடும். சுயதொழில், வியாபாரம் இவற்றை சிலர் துவங்கக் கூடும். பெற்றோர், சகோதர வகையினரால் செலவுகள் இருந்தாலும் அனுசரணையாக இருப்பார்கள். மனைவி, குழந்தைகள் நலனுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தாராளமாக செலவு செய்வீர்கள். இன்றும் நாளையும் சில பணிகளை முடித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள். 8ம் தேதி இரவு மணி 2.01 முதல் 11ம் தேதி அதிகாலை மணி 4.49 வரை சந்திராஷ்டமம். அடிக்கடி கோபம், உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலை, தவறான முடிவுகள் என்றிருக்கும். தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். வீட்டு விவகாரங்கள், தொழில் ரீதியான முயற்சிகளில் தகுந்த முன்யோசனையுடன் செயல்படுதல் நல்லது. 11, 12ம் தேதிகளில் பதட்டம், பரபரப்பாக செயல்படுவீர்கள். உறவுகளால் மேன்மை ஏற்படும்.
பரிகாரம்: அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுதல் நல்லது.

மிதுனம் 

மிதுன ராசி அன்பர்களே,

தவறுகளையும், தடுமாற்றங்களையும் வெளிக்காட்டாமல் நடந்து கொள்ளும் மிதுன ராசிக்காரர்களே: இந்த வாரம் யோகபலன் ஏற்படும் சூழ்நிலையே. ஒரு சிலருக்கு ஸ்திர சொத்துக்கள் ஏற்படும். சிலர் வண்டி வாகன யோகத்தினைப் பெறுவர். பூர்வீக சொத்துக்களும் வரலாம். வழக்குகளில் வெற்றி போதிய வருவாய் சீரான குடும்பம் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன், மனைவி உறவில் நெருக்கம் ஏற்படும். அரசாங்க அனுகூலமும் உண்டாகலாம். பணவரவுகள் தேவைக்கு மேல் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் இனங்கள் நல்லபடியாக கைகொடுக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கும். தொழிலதிபர்களுக்கு, எதிலும் விழிப்புடன் செயல்படுவது நலம். வியாபாரிகளுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். இன்று அடிக்கடி யோசனைகள் மாறும். காரியங்களில் இழுபறி நீடிக்கும். பணம் வரும். 7, 8ம் தேதிகளில் உற்சாகம் கூடும். பேச்சு, செயல் விறுவிறுப்பு கூடும். 9, 10ம் தேதிகளில் தெய்வ சிந்தனைகள், தொழில் சிந்தனைகள் அதிகமாகும். 11ம் தேதி அதிகாலை மணி 4.50 முதல் 12ம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம். தேவையற்ற பணி ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் வகையில் சிரமப்பட நேரிடும். பயணங்களில் பாதுகாப்பை கருத்தில் கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நாராயணனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுதல் நல்லது.

கடகம் 

கடக ராசி அன்பர்களே,

செயல்பாடுகளை வெற்றிகரமாக ஆக்கும் கடக ராசிக்காரர்களே: இந்த வாரம் எதிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல் அவசியம். செய்தொழில் துறையில் தங்கள் இஷ்டம் போல் எதுவும் நடக்காததால் சஞ்சலமும், சங்கடமும் பட வேண்டியிருக்கும். பெற்றோர் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக செலவும், அலைச்சலும் இருக்கும். சகோதர வகையில் ஆதரவு குறைந்து அவர்களால் சச்சரவுகள் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சரிவர இல்லாததால், கவனமாக இருப்பது நல்லதாகும். அக்கம் பக்கமும் அப்படியே தான். குடும்ப வகையில் சந்தோஷக் குறைவும் சங்கடங்கள் அதிகரித்துக் காணப்படுவதால், தாங்கள் தான் எதற்கும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். வேலை வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க நேரிடலாம். உறவினரின் ஒத்துழைப்பு கிட்டி வரும். இன்று காரணமற்ற பயம், குழப்பம் ஏற்பட்டு விலகும். 7, 8ம் தேதிகளில் அவசரத்தால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். 9, 10ம் தேதிகளில் புதிய முயற்சி, படிப்பு, உத்தியோகம் போன்றவற்றில் முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். 11, 12ம் தேதிகளில் கவுரவம், சாதுர்யம், வருமானம் கூடும்.
பரிகாரம்: அனாதை சிறுவர் களுக்கு உணவு அளித்தல் நல்லது.

சிம்மம் 

 

சிம்ம ராசி அன்பர்களே,

நம்மால் முடியாதது எதுவும் அல்ல என்ற சிந்தனை கொண்ட சிம்ம ராசிக்காரர்களே: இந்த வாரம் தாங்கள் நினைப்பதை சாதிக்கக் கூடிய வகையில் இருக்கும். உடல்நிலையில் இருந்து வந்த நோய்கள் தீரும். நினைத்துச் செயல்பட்டு நின்று போன காரியங்கள் யாவும் புது வேகத்துடன் செயல்பட ஆரம்பிக்கும். வீடு, மனை வாங்கவும், விற்கவும் நல்ல பயன் தரும் வாரமே இது. உடன் பிறப்புகளிடம் இருந்து வந்த சச்சரவுகள் கருத்து வேறுபாடு தீர்ந்து ஒற்றுமையாவார்கள். சிந்தனைகள், ஆலோசனைகள், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரம் சீராகவே இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சியில் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கி அதில் வெற்றி காண்பீர்கள். உத்தியோக துறையில் சங்கடங்கள் நிகழாது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்ட போதும் அதில் கவனமாக செயல்படவும். இன்று பல விஷயங்களையும் குழப்பிக்குவீங்க. மனம் அலைபாயும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 7, 8ம் தேதிகளில் பண வரவு, குடும்ப வசதி, காரிய வெற்றி, கலகலப்பான சந்தோஷங்களுக்கும் சாதகமான நாள். 9, 10ம் தேதிகளில் பாக்கிகள் வசூலாகும். ஆதாயம், சகாயம் கிடைக்கும் 11, 12ம் தேதிகளில் வீட்டு கவனிப்பு, செலவு என்று அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் கூட தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: சிவப்பு ஆடை அல்லது சிவப்பு தானியங்கள் அல்லது சிவப்பு காய்கறிகள் தானம் செய்தல் நல்லது.

கன்னி 

கன்னி ராசி அன்பர்களே,

புகழ்ச்சிக்கு மயங்காத கன்னி ராசிக்காரர்களே: இந்த வாரம், எதிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை ஏற்படும். செய்யும் காரியங்களில் அவநம்பிக்கை குறைந்து தைரியமுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். அதன் மூலம் வெற்றியும், பணலாபமும் இருக்கும். முக்கியமாக பெண்கள் மூலம் சில உதவிகளை நீங்கள் பெறக் கூடும். தொழில் துறையில் பல காரிய சாதனைகளை செய்து வருவாய் பெருக்கத்தை உண்டாக்கிக் கொள்வீர்கள். எதிர்ப்புகள், போட்டிகள் என்பவை, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். பெற்றோர் வகையில் இருந்து வந்த துன்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில்துறையில் சந்தை நிலவரத்திற்கேற்ற சில மாற்றங்களைச் செய்து கொள்ளுதல் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்துக் கொண்ட பணிகளில் பொறுப்புடன் செயல்பட முயற்சியுங்கள். இன்று மாற்றங்களை பற்றிய சிந்தனைகள் அதிகமாகும். சில சந்திப்புகள் பயன் தரும். அவசிய செலவுகள் ஏற்படும். 7, 8ம் தேதிகளில் அலைச்சல் அதிகமாகும். சில காரியங்களை முடிக்க முடியாமல் விரக்தி ஏற்படும். குடும்ப கவலை கூடும். 9, 10ம் தேதிகளில் மனம் தெளிவு பெறும். உற்சாகம் கூடும். பண வரவு வரும். கடினம் என்று எண்ணிய காரியம் ஒன்று எளிதாக முடியும். 11, 12ம் தேதிகளில் உறவினர்கள் வருகை, தெய்வ வழிபாடுகள், ஏதேனும் உதவிகளுக்காக பிறரை சந்திப்பது என்றிருக்கும்.
பரிகாரம்: சிவன் கோவிலில் மூலவரை வணங்கி வழிபடுதல் நல்லது.


துலாம்

 

துலாம் ராசி அன்பர்களே,

முடிவுகளில் மாற்றம் கொள்ளாது செயல்படும் துலா ராசிக்காரர்களே: இந்த வாரம், நல்லது அதிகமாகவும் கெடுதல் குறைவாகவும் நடக்கும். ஆரோக்கியம் உற்சாகம் மிகுந்து செயல்படும். செய்ய நினைக்கும் காரியங்களை நினைத்தபடி செய்து முடித்துவிடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி கிடைக்கப் பெற்று, சில சாதனைகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாக பொறுத்திருக்க வேண்டும். பொன், பொருள், சேர்க்கைக்கு இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். வாகனங்களை பழுதுபார்க்கும் செலவு இருக்கும். சான்றோர்கள் சந்திப்பு நேரிடும். வேலை வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து வரும். உறவினர்களால் நல்ல அன்பும், ஆதரவும் சுபகாரிய நிகழ்ச்சிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு, மனை விற்பதையோ, வாங்குவதையோ யோசித்துச் செயல்படுதல் நல்லது. இன்று அமைதியாக சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனைவி, குழந்தைகளுக்காக செலவுகள் இருக்கும். 7, 8ம் தேதிகளில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உதவி, உபயோகம், உற்சாகம் என்றிருக்கும். 9, 10ம் தேதிகளில் வருமானம் கூடும். தொழிலில் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். உறவுக்காரர்களின் விவகாரம் ஒன்றினால் அலைச்சல் இருக்கும். 11, 12ம் தேதிகளில் செலவுகள் அதிகமாகும். எந்த ஒரு விவகாரத்திலும் முன் யோசனையுடன் செயல்படுதல் நல்லது.
பரிகாரம்: அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல் சிறப்பு.

விருச்சிகம் 

விருச்சிக ராசி அன்பர்களே,

எண்ணிச் செயல்படுதல், சொல்லியதை நிறைவேற்றல் இயல்பாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே: இந்த வாரம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் யாவும் தடை தாமதம் ஏற்படும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பெற்றோரால் செலவுகளும், அலைச்சல்களும் இருக்கும். கணவன், மனைவி உறவு நிலை அன்னியோன்யம் குறைந்து காணப்படும். வீண் செலவுகள் வரும். வருமானம் போதாமல் இருக்கும். கடன் கவலை இருக்கும். சகோதர வகையில் விவாதங்கள் அதிகமாகும். தொழில் வகையில் வளர்ச்சிக்கான வழி கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு அவசர முடிவுகள் நஷ்டத்தினை ஏற்படுத்தலாம் கவனம். சந்தை நிலவரத்தையும் கவனத்தில் கொள்க. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று எதிர்பார்ப்புகள் நிறைவேறும், அவசியப்பட்ட வேலைகளை செய்து கொள்ள முடியும். பயணங்கள் ஆதாயம் தரும். 7, 8ம் தேதிகளில் விருப்பங்கள் நிறைவேறும். வேலை வாய்ப்புகள் அமையும். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிட்டும். 9, 10ம் தேதிகளில் மனைவி மற்றும் பிற பெண்களால் ஆதாயங்கள் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். 11, 12ம் தேதிகளில் சில நண்பர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீகாமாட்சி அம்மனை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல், தடைபட்ட காரியங்கள் கைகூடும்.

தனுசு 

 

தனுசு ராசி அன்பர்களே,

வெற்றி ஒன்றையே இலக்காக கொண்ட தனுசு ராசிக்காரர்களே: இந்த வாரம் சுமாரான பலனே ஏற்படும். பிறரின் உதவியை நாடிச் செல்ல வேண்டாம். ஏமாற்றம்தான். செய்காரியங்களில் குழப்பங்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். தங்கள் திறமையும் வெளிப்படும். கோர்ட் விவகாரங்கள் வெற்றியடையும். புதிய தொழில் மற்றும் வியாபாரம் இவற்றை சிலர் துவங்கக் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியம் பரவாயில்லை. கணவன், மனைவி உறவு நிலை அன்பு மிகுந்து காணப்படும். பெற்றோர் வகையில் அன்பும், ஆதரவும் இருக்கும். மற்றவர்களால் சங்கடங்கள் சஞ்சலங்கள் இருப்பதால் அவர்களிடம் உஷாராகப் பழக வேண்டும். தொழில் துறையில் திட்டங்களை தீட்டுவதில் இருக்கும் வேகம் செயல்படுத்துவதிலும் இருக்கட்டும். இன்று எதிலும் தடை, தாமதம், அலைச்சல், வீண் செலவுகள் என்றிருக்கும். 7, 8ம் தேதிகளில் வேலை யில் நெருக்கடி, வீட்டுக் காரியங்களில் அரைகுறையான செயல்பாடுகள் என்றிருக்கும். 9, 10ம் தேதிகளில் ஊக்கம், உபயோகம், கலை ஆர்வம், கலகலப்பான சந்தோஷம் என்றிருக்கும். 11, 12ம் தேதிகளில் தொழில் சம்பந்தமான நடவடிக்கைகள், வியாபார விரிவாக்கம் என்றிருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல் நல்ல பலன்கள் விருத்தியடையும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே,

பிறர் நலனை பெரிதாக கொண்ட மகர ராசிக்காரர்களே: தங்களுக்கு இந்த வாரம், எங்கும், எதிலும் பாதிக்கு பாதி வெற்றியான சூழ்நிலையே. உடல் ஆரோக்கியத்திலும் நாள்பட்ட நோய் இருந்தால் குணமாகும். செயல்பாடுகள் யாவும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தால், உங்கள் தேவைக்கேற்ப உதவிகள் கிடைத்துவிடும். பண வரவுகள் சேமிப்புக்கு இல்லாவிட்டாலும் முக்கியமான காரிய செலவுகளுக்கு கிடைத்து வரும். கொடுக்கல், வாங்கல் இனங்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். வாகன வசதி இருக்கும். வெளியாரின் உதவி சமயத்தில் கிடைக்கும். உற்றார், உறவினர் உங்கள் மீது குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பார்கள். போதிய வருவாய் இராது. பெற்றார் வகையில் ஆலோசனைகள் கிடைக்கும். அன்னியர்களால் சிற்சில நன்மைகளை அடைவீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை குறைந்து மனக்கசப்பு உண்டாகக் கூடும். இன்று நண்பர்கள் மூலம் அன்பு, ஆதரவு அவர்களால் எதிர்பாராத உதவிகள் என்றிருக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். 7, 8ம் தேதிகளில் மனதில் இனம்புரியாத கலக்கம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். 9, 10ம் தேதிகளில் எதிரிகளின் மறைமுகமான தொல்லை. அரசு துறையினால் சிரமங்கள் என்றிருக்கும். 11, 12ம் தேதிகளில் உடல் நலத்தில் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகள் அவசியம்.
பரிகாரம்: சிவபெருமானை பூக்களால் மாலை தொடுத்து சாற்றி வழிபடுதல் கெடு பலனை குறைக்கும்.

கும்பம் 

கும்ப ராசி அன்பர்களே,

விருப்பு வெறுப்பற்று செயல்படும் கும்ப ராசிக்காரர்களே: இந்த வாரம், சாதாரண பலன்களாக ஏற்பட்டு வரும். எல்லா விவகாரங்களிலும் பரவாயில்லை என்ற சூழ்நிலையே. கடன் தொல்லை கொடுக்காது. வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். தொழில் துறையில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல், சில தடைகள் ஏற்படலாம். குழந்தைகள் வழியில் கவனம் செலுத்தப்பட வேண்டும். எதிர்ப்புகள் ஏற்படும். ஸ்திர சொத்துக்களை பராமரிப்பதற்கான செலவுகள் கூடுதலாக இருக்கும். விபரீத எண்ணங்கள் உருவாகக் கூடும். கவனம். உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் இருந்தாலும் அதற்கேற்ற நன்மைகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வது, ஜாமின் கொடுப்பது போன்ற காரியங்களில் கவனம் இருக்கட்டும். தொழில், வியாபாரம் இவைகள் வழக்கம் போல். இன்று தூக்கம் கெடும். வீண் அலைச்சல் அதிகமாகும். எதிர்பாராத வீண் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம். 7, 8ம் தேதிகளில் ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல உணவு, உறக்கம் கிடைக்கும். பெண்களால் நன்மைகள் உண்டு. 9, 10ம் தேதிகளில் பெற்றோரால் நன்மை உண்டு. குழந்தைகளின் மேன்மைக்காக கடன்பட்டு செலவுகள் மேற்கொள்வீர்கள். 11, 12ம் தேதிகளில் கட்டாயத்தின் பேரில் தெய்வ காரியங்களை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: அம்மனுக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுதல் மனக்குறையை அகற்றும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே,

சலனமில்லாத மீன ராசிக்காரர்களே: இந்த வாரம், நினைத்த காரியங்களை சற்று போராட்டத்துடன் செய்து முடிப்பீர்கள். பணவசதிகள் திருப்தி தரும். ஆடம்பர பொருள் வசதிகள் நல்லபடியாக வந்து சேரும். வாகன வசதிகள் நன்றாக இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பெற்றோர் வகையில் எந்த குறையும் இருக்காது. சகோதர வகையில் ஆதரவு இருக்கும். சிலருக்கு நவீன வாகனங்கள் வாங்கும் யோகமுண்டு. சிலர் ஸ்திர சொத்துக்களான வீடு, காலி இடம் முதலியவைகளை வாங்கக் கூடும். தொழில் துறையில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. அரசாங்க ஆதரவுக்காக நேரத்தை செலவிட்டது தான் மிச்சம். கூட்டுத் தொழில் புதிய முயற்சியை யோசித்துச் செய்யவும். இன்று காலை முதல் இரவு மணி 10.49 வரை சந்திராஷ்டமம். எதிலும் முன் யோசனையுடன் செயல்படுதல் அவசியம். 7, 8ம் தேதிகளில் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியே. இருப்பினும், ஏதோ ஒரு கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும். 9, 10ம் தேதிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வருமானம் கூடும். 11, 12ம் தேதிகளில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசியால் சகஸ்ரநாமம் வழிபாடு செய்தல் விரும்பியதை பெற வழிவகுக்கும்.

நன்றி தினமலர்.com





குருபெயர்ச்சி பலன்கள்

Guruperchi

Ads

மின் அஞ்சலில் செய்திகளை பெற

Ads

Tamil Cine Actress Gallery

படித்துவிட்டீர்களா?

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal

Ads

Content Protected Using Blog Protector By: PcDrome.